வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (10:56 IST)

பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு

Sailendra
பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள சாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பெண்களையும் சிறுவர்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
ஆபரேஷன் மறுவாழ்வு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் இதுகுறித்து அதிரடியாக சோதனை செய்யப்பட்டது. 37  மாவட்டங்களில் 726 பிச்சைக்காரர்கள் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் பிச்சை எடுக்கும் பெண்கள் குழந்தைகள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. பிச்சை எடுப்பவர் குறித்த தகவலை 044 28447701  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva