1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:57 IST)

ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அதிரடி வியூகம்: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் அமைப்பு ஈடுபட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில புதிய ஐடியாக்கள் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஸ்டாலினிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது 
 
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் மூன்றில் ஒரு பங்கு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அப்படி கொடுத்தாலும் அந்த கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் அந்த தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார் 
 
அதுமட்டுமின்றி இளைஞர் அணிக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் குற்றப்பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க வேண்டுமென்றும் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது 
 
பிரசாந்த் கிஷோரின் இந்த ஐடியா கசிந்துள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சமீபத்தில் திருமாவளவன் திடீரென பொங்கி எழுந்தது இதன் காரணமாகத்தான் என்று கூறப்படுகிறது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்து வரும் தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது