வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (15:00 IST)

அமைச்சர் பாஸ்கரனா... யாருப்பா அவன்? கலாய்த்து விட்ட எஸ்.வி. சேகர்!

அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர்.
 
கடந்த மக்களைவை தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக – அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முதற்கொண்டு தங்களது கூட்டணியை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றுஇல் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன் ”தமிழக அமைச்சரவையிலேயே பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவை விட்டு பிரிய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என பேசியுள்ளார்.
 
அவரது இந்த பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் சிலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான ஒருவர்தான் எஸ்.வி.சேகர். 
 
பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர், அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா? ஹல்லோ ராஜ்பவனா... என  பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
 
ஆனால் அமைச்சர் பாஸ்கரன், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுகவை யாராலும் பிரிக்க முடியாது என மாற்று கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.