திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:18 IST)

தேசிய கொடி அவமதிப்பு வழக்கு – முன்ஜாமீன் கேட்டு எஸ் வி சேகர் மனுத்தாக்கல்!

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தமிழக அரசு மீது பல்வேறு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தலைவர்கள் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது போன்ற செயல்களில் முதல்வர் கண்டம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவங்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்த தவறான தகவல்களை பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

தேசிய கொடியில் உள்ள காவி நிறம் சுதந்திரத்திற்காக மக்கள் சிந்திய குருதியை நினைவுப்படுத்தும் பொருட்டு உள்ளதாக பாடங்களில் உள்ள நிலையில் அதை மதத்தோடு தொடர்புப்படுத்தி பேசியுள்ள எஸ்வி சேகர் ’தேசிய கொடியில் உள்ள காவி நிறத்தை நீக்கிவிட்டு முதல்வர் கொடி ஏற்றுவாரா என கேள்வி எழுப்பியதாகவும், இது உள்நோக்கத்துடன் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தேசிய கொடியை பற்றிய தகவல்களை திரித்து கூறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.