உதயநிதி பேசும் முன்பே கலைந்து போன கூட்டம் - மூன்றாம் கலைஞர் ஆக முடியுமா?
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசியல் கூட்டம் காத்து வாங்கியதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். திமுக தொடர்பான அரசியல் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு பேசி வருகிறார். ‘மூன்றாம் கலைஞரே’ என அவரை முன்னிறுத்தி அடிக்கப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு திமுக கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். நான் திடீரென்னு அரசியலில் குதித்துவிட்டேன் என்று சிலர் எரிச்சல்படுகிறார்கள். நான் பிறந்ததில் இருந்தே திமுகதான். என் உடலில் ஓடுவது திராவிட முன்னேற்ற கழக ரத்தம். இதைச் சொல்வதில் நான் பெருமையடைகிறேன். எனக்கு பொறுப்பு, பதவி தரப்போவதாக சிலர் சொல்கிறார்கள். இவ்வளவு பேரைச் சந்தித்ததைவிட, எனக்கு வேறு என்ன பதவி கிடைத்துவிடப்போகிறது என அவர் மேடையில் அள்ளி வீசினார்.
ஆனால், அவர் அப்படி பேசிக்கொண்டிருந்த போது, அதைக் கேட்க கூட்டம் அங்கே இல்லை. அவர் பேசுவதற்கு முன்பே திமுகவினரே கிளம்பி சென்று விட்டனர் என அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வளைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.