திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:35 IST)

உதயநிதிக்கு தேசிய விருது: இயக்குனர் உறுதி

‘கண்ணே கலைமானே‘ படத்திற்காக உதியநிதி ஸ்டாலின் தேசிய விருது வாங்குவார் என சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

 
 
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைதுள்ளார், வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று நிறைவடைந்தது.
 
இந்த படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது:-
 
“இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் இயற்கை விவசாயியாக நடித்துள்ளார். அவருடைய வேலையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் உண்மையான படத்துக்கு நேர்மையான அர்பணிப்பு என்று சொல்ல வேண்டும். அவருக்கு நிச்சயமாக  ’கண்ணே கலைமானே’படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என கூறினார்.