திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (09:36 IST)

வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டியா? மத்திய அரசு விளக்கம்!

house rent
பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி நேற்று பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிக நோக்கிலான வாடகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி என்றும் குடியிருப்பு பகுதியை வர்த்தக நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
சொந்த பயன்பாட்டிற்காக பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் அதேபோல் தனி நபருக்கு வாடகைக்கு விட்டாலும் ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது 
 
வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற தகவல் பரவியதை அடுத்து மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது