1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (21:36 IST)

யுக்ரேன் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை செலுத்திய ரஷ்யா: உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?

ஹைபர்சோனிக் ஏவுகணையை செலுத்தி மேற்கு யுக்ரேனில் பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய ஆயுத கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கின்செல் பாலிஸ்டிக் ஏவுகணை எனப்படும் இந்த ஏவுகணைகளை ஒரு போரில் ரஷ்யா பயன்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த ஏவுகணைகள் MiG-31 போர் விமானங்கள் மூலம் ஏவப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
'கின்செல்' எனப்படும் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
ஹைபர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?
 
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமான ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் ரஷ்யாவின் நிபுணத்துவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்த ஏவுகணைகள் 8 மீட்டர் நீளம் கொண்டவை மற்றும் போர்தந்திர திறன் கொண்டவை.
 
ஆனால் கேள்வி என்னவென்றால், இது மற்ற வழக்கமான ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளை விட ஆபத்தானதா?
 
"நான் அதை முக்கியமானதாகக் கருதவில்லை. ஹைபர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரஷ்யா எவ்வளவு பயனடையும் என்று எனக்குத் தெரியவில்லை," என்கிறார் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட்டின் அணுசக்தி கொள்கை நிபுணர் ஜேம்ஸ் ஆக்டன்.
 
ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் ரஷ்யா உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது என்று கடந்த டிசம்பரில் அதிபர் புதின் கூறியிருந்தார். இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் கண்காணிக்க மிகவும் கடினமானது ஏனெனில் அவை பறப்பின் நடுவில் திசையை மாற்றிக்கொள்ளும்.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணை எவ்வளவு பயனுள்ளது?
 
இலக்கை துல்லியமாக தாக்கவும், எதிரிகளின் கண்ணில் படாதவாறு மறைந்து கொள்ளவும், ஏவுகணைகள் காற்றில் தன் இயக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறார் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் லாரா கிரிகோ. நவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகள் இதைச் செய்யக்கூடியவை.
 
யுக்ரேனிய அதிபரின் வார்த்தை ஜால உத்தி மேற்கு நாடுகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறது?
யுக்ரேன் Vs ரஷ்யா: இந்தப் போர் முடிவதற்கான 5 வழிகள் என்னென்ன?
"ஏரோடைனமிக் விசையைப் பயன்படுத்தி அது தனது திசையை மாற்றிக்கொள்ள முடியும். வளிமண்டலத்தில் மிக வேகமாகச் செல்லும் போது மேலும் கீழும் அல்லது வலதுபுறம் மற்றும் இடதுபுறமும் திரும்பும் வகையில் அவற்றின் வடிவம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது," என்கிரார் லாரா.
 
இந்த திறன் எதிரியின் கண்களில் இருந்து மறைந்து தாக்க உதவுகிறது. ஆனால் ஏவுகணையைக் கண்காணிப்பது கடினம் அல்ல என்று லாரா கூறுகிறார்.
 
இந்த ஏவுகணைகள் ஒளியைப் பிரதிபலிப்பது மட்டுமின்றி, வெப்பத்தையும் உருவாக்குகிறது. எனவே சென்சார்கள் அவற்றைக் கண்டறிய முடியும். பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிய, அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளியில் அகச்சிவப்பு சென்சார்கள் கொண்ட செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்கியுள்ளன என்று லாரா கிரிகோ கூறுகிறார்.
 
 
வெப்பம் மற்றும் ஒளி காரணமாக, அகச்சிவப்பு அமைப்பு அவற்றின் முழு பாதையையும் கண்டுபிடிக்க முடியும். ஏவுகணை விழும் முன் அதன் வேகம் குறைகிறது. அப்போது அவற்றை ரேடாரிலும் பார்க்க முடியும்."
 
"இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகள் அதிக அளவில் இல்லாத நிலையில் இதை பயன்படுத்தியிருப்பதன் மூலம் இதை தனித்துவமான ஒரு நிகழ்வாக கருதலாம். அதே சமயம் இந்த ஏவுகணை தங்களிடம் உள்ளது என்பதை காட்டிக் கொள்ளும் செயலாகவும் இது இருக்கலாம்," என்று சூரிச்சில் உள்ள பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த டொமினிகா குனெர்டோவா கூறுகிறார்.
 
யுக்ரேன் என்ற சாக்குப்போக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு சொல்லும் செய்தியா?
 
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, புதின் கின்செலை "வெல்லமுடியாத" ஆயுதங்களின் தொடராக முன்வைத்தார். இவை எதிரியின் தற்காப்பை உடைக்க வல்லது என்று அவர் குறிப்பிட்டார். பிற ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சிர்கான் மற்றும் அவன்கார்ட் ஆகும். இவையும் அதிக வேகம் மற்றும் தாக்குதல் தூரத்துடன் வருகின்றன.
 
கின்செல் ஏவுகணை வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மிக்-31 போர் விமானங்கள் ரஷ்ய நகரான கலினின்கிராட்க்கு அனுப்பப்பட்டன என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து பல ஐரோப்பிய நாடுகளை குறி வைக்க முடியும்.
 
இருப்பினும், யுக்ரேன் ஆயுதக் கிடங்கு எங்கிருந்து தாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
"இது மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சமிக்ஞையாகும், ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பத் துணிந்தன என்று புதின் கோபமாக இருக்கிறார்" என்று குனெர்டோவா கூறுகிறார்.
 
"இது ஒரு அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை. ரஷ்யாவின் போர் கையிருப்பில் பெரும்பகுதி இது. ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் வழிகாட்டியில்லாத குண்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவை இப்போது பற்றாக்குறையாக இருப்பற்கான சாத்தியகூறு அதிகமாக உள்ளது," என்று ஆக்டன் பிபிசியிடம் கூறினார் .