உக்ரைன் மீது அணு ஆயுதத்தால் தாக்க ரஷ்யா திட்டம்? – நேட்டோ எடுத்த முடிவு!
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது ஹைப்பர் சோனிக் உள்ளிட்ட ஒலிவேக ஏவுகணைகளை கொண்டும் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளலாம் என உலக நாடுகளிடையே பீதி எழுந்துள்ளது. இதனால் அணு ஆயுத தாக்குதலில் இருந்து உக்ரைனை காக்கும் விதமாக அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்க நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.