செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (11:55 IST)

விடுமுறை நாட்களிலும் செயல்படும் ஆர்டிஓ ஆபீஸ்

விடுமுறை தினமான இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கும் என்றும், ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பெண்களுக்கு இருச்சக்கர வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள் என்பதால் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு(ஆர்.டி.ஓ.) பெண்கள் படையெடுத்து வருகின்றனர். 
 
இதனால் மக்களுக்கு உதவும் வகையில் விடுமுறை தினமான இன்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.