பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதில் ரூ.500 ரொக்கம்: அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச பொருள்களுக்கு பதிலாக ரூபாய் 500 ரொக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியிலும் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு பதிலாக ரூபாய் 500 தொகை வழங்க புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து மாநில மக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் பதிலாக 500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva