திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (20:58 IST)

ராஜபாளையத்தில் தம்பதிகள் கொலை: ரூ.500 கோடி கொள்ளை என தகவல்!

murder
ராஜபாளையத்தில் மர்மமான முறையில் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கில்  ஆவணங்கள் நகைகள் ரொக்கம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் குருபாக்கியம் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது இரு மகன்களும் வெளியூரில் பணிபுரிவதால் இந்த தம்பதிகள் தனியாக வசித்து வந்தனர்.
 
ராஜகோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் ராஜபாளையம் பகுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும் தெரிகிறது
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், அவர்களது உடல்கள் அழுகி இருந்தால் இந்த சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது
 
இந்த முதிய தம்பதியினர் வீட்டிலிருந்து ரூபாய் கோடிக்கணக்கில் மதிப்பிலான நகைகள் ரொக்கம் ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருள் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது