கனியாமூர் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெறாது: வேறு பள்ளிக்கு மாற்றம்!
கனியாமூர் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெறாது: வேறு பள்ளிக்கு மாற்றம்!
சமீபத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் மாணவியின் உறவினர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது என்பதும் இதனால் கனியாமூர் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலும் தீக்கிரையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவி மரணம் காரணமாக கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி அமைக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக்கு பதிலாக குரூப் 4 தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளது என கோட்டாட்சியர் பவித்ரா என்பவர் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் இதனை கவனத்தில் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.