வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (09:37 IST)

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு..

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் என்ற பகுதியில் ரேஷன் கார்டு வழங்க பச்ச முத்து என்ற முதுநிலை வருவாய் அதிகாரி ரூபாய் 500 லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து லஞ்சம் கொடுத்தவர் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்வு வெளியாகியுள்ளது.
 
இந்த வழக்கில் ரூபாய் 500 லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் பச்சமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தான் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு அச்சப்படுவார்கள் என்று இந்த தீர்ப்பு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva