வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (10:04 IST)

சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. FIR-ல் முக்கிய தகவல்

சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது
 
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை ஆகியவை பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து பறிமுதல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது.
 
நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,.
 
மேலும் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு வருமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்
 
Edited by Mahendran