வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (14:43 IST)

ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம்: சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

rummy
ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம் அடைந்ததால் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
 
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஐடி ஊழியராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு வேலை போய்விட்டது
 
இதனை அடுத்து மதுவுக்கு அடிமையான அவர் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக தெரிகிறது 
 
அதில் சுமார் 35 லட்சத்தை அவர் இழந்துள்ளார். இதனை அடுத்து கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டது
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பிறகு ஒரு மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது