1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (14:30 IST)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம்..!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிக்கும் விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இரண்டு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஒரு இடத்திற்கு சுமார் ஏழு பேர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva