1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (18:41 IST)

’’கசடதபற’’ பட டீசரை ரிலீஸ் செய்த விஜய்சேதுபதி!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபர என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் 'கசடதபற'. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த படம் இப்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன். இந்நிலையில் இன்று அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ்வில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் கசடதபற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.