புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:12 IST)

ராயப்பேட்டையில் போலீஸை தாக்கிய ரவுடி என்கவுன்டரி சுட்டுக்கொலை!

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை விசாரிக்க சென்ற காவல் அதிகாரிமீது ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். 
 
சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சில ரவுடிகள் மது அருந்தி விட்டு அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் கொடுத்தார். 
 
இந்த தகவல் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் ராஜவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜவேலு அங்கு சென்று அந்த ரவுடிகளை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த ரவுடிகள் அவரை சராமரியாக தாக்கியுள்ளனர். 
 
உயிருக்கு போராடிய ராஜவேலுவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில் ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடியான அரவிந்தன் மற்றும் அவனின் கூட்டாளிகளான ஜிந்தா, வேல்முருகன் உள்ளிட்டோர் ராஜவேலுவை தாக்கியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஆனந்தன் என்பவரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். சென்னை அடையாறு மத்திய கைலாஷ் செண்ட்ரல் பாலிடெக்னிக் அருகே ரவுடி சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
ஆனந்தனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதேபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை என 12 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.