செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: திங்கள், 23 ஜனவரி 2023 (20:31 IST)

'வீடியோவால் வந்த வினை.' பிரபல யூடியூபர் வீட்டில் கொள்ளை முயற்சி !

cyber tamila
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் விலாகர் என்ற யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சுஹைல்(29). இவர் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டு கேஜி சாவடி பிச்சனூர் பகுதியில் உள்ள நிலையில், இவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த விளையாட்டு தொடர்பான வீடியோக்கள் எடுத்து, யூடியூப்பில் பதிவிட்டு வரும்  நிலையில், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கார், வீடு என வாங்கியுள்ளதாக அவர் யூடியூப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் தன் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த திருடன், அவர் வீட்டில் திருட முயற்சித்துள்ளார், உடனே அருகில் வசிப்போர் அவரை மடக்கிப் பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர்.