புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (13:17 IST)

எதுவுமில்லை என்ற இளைஞரை கத்தியால் கீறிய கொள்ளையர்கள்!

சென்னை தி.நகரில் வடமாநில இளைஞர் ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வடமாநிலத்தைச் சேர்ந்த பாலேஸ்வர் சிங் என்ற இளைஞர் தி.நகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது மூன்று பேர் பைக்கில் வந்து அந்த இளைஞர் அருகில் நிறுத்தியுள்ளனர்.
 
அவரிடம் பர்ஸ், செல்போன், பணம் என கையில் இருக்கும் அனைத்தையும் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பாலேஸ்வர் தன்னிடம் எதுவுமில்லை என்று கூறியுள்ளார். எதுவும் இல்லாமல் எதற்கு வெளியே வர என்று அந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் இளைஞரில் கையில் கத்தியால் கீறிவிட்டு தப்பிச் சென்றனர்.
 
அருகில் இருந்தவர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.