செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (22:30 IST)

இன்று இரட்டை இலை, நாளை ஆர்.கே.நகர்: மத்திய அரசின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை என்று இன்று தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம், நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைய அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை அறிவிக்கும் வரை ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தள்ளி வைத்துள்ளதாகவும், உண்மையில் குஜராத் தேர்தல் அறிவிப்பின்போதே ஆர்.கே.நகர் தேர்தல் தேதியையும் அறிவித்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மத்தியில் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு இரட்டை இலை தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதாகவும், தற்போது அதே மத்திய அரசின் கைப்பாவையாய் ஆர்.கே.நகர் தேர்தல் தேதியையும் அறிவிக்க முடிவு செய்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.