1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (23:08 IST)

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: நாளை காலை அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக பல ஆவணங்கள் உறுதி செய்துள்ளதால் இந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை நாளை காலை பத்து மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருப்பதாகவும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது.



 


இந்த தகவல் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக தினகரன் அணியினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.