வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (17:30 IST)

ஆர்.கே.நகரில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள்

இடைதேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தேர்தலில் பிரச்சாரம் முடிவிற்கு வந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.


 
வருகிற 21ம் தேதி ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதன்படி இன்று மாலை 5 மணியோடு ஆர்.கே.நகரை சாராதவர்கள் அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதையடுத்து, பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின், மதுசூதனன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களின் பிரச்சாரம் முடிவிற்கு வந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவு படி, ஆர்.கே.நகரில் வாக்காளோர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல கெடுபிடிகளை விதித்துள்ளது.
 
ஊடகசான்று, கண்காணிப்பு குழு அனுமதியின்றி வலைத்தளங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
 
வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இன்று மாலையிலிருந்து தேர்தல் நடைபெறும் 21ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்புற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்.கே.நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 5 மணியிலிருந்து வருகிற 21ம் தேதி வரை மூடவேண்டும் எனவும், தேர்தல் முடிவு வெளியாகும் 24ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.