1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:38 IST)

திருமாவளவன் பிரச்சனையில் ராமதாஸை இழுத்த காயத்ரி ரகுராம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை சுட்டிக்காட்டிய நடிகை காயத்ரி ரகுராம், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்
 
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தனக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவு தருவார் என தான் நம்புவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நபர்களை அடக்குவதற்கு சரியான நபர் ராம்தாஸ் தான் என்றும், அவர் எனக்கு ஆதரவு அளிப்பதோடு விசிகவுக்கு கண்டனம் தெரிவிப்பார் என்றும், என்னை போன்ற பெண்களுக்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றும், சற்றுமுன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி, எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது அவ்வாறு பேசினால் அது குற்றம் என்றும், எனவே திருமாவளவனின் எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் காயத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் செய்யும் வன்முறைகளுக்கு, தலைவர் என்ற முறையில் அவர் தான் பொறுப்பு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 
திருமாவளவன் விவகாரத்தை காயத்ரி முழு அளவில் எடுத்துள்ளதால் அவரது பெயர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது