1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (20:11 IST)

தலைகீழாக நின்றவாறு பைக் ஓட்டி இளைஞர் சாதனை

udhay chandaran
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைகீழாக நின்றபடி பைக் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
 
உலகில் எல்லோரும் எதையாவதும் சாதிக்க வேண்டுமென்று விரும்புவது வாடிக்கைதான். அந்த சாதனையை நிகழ்த்த யார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு அதற்காக உழைக்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் அந்த வெற்றி கையில் வந்து சேரும்!

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைகீழாக நின்றபடி பைக் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் உதய சந்திரன். இவர், பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர் இதில் புதுமையாக சாதனை படைக்க எண்ணி, 1கிமீ தூரம் தலைகீழாக நின்று பைக் ஓட்டி சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.