செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:20 IST)

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழை குறித்த தகவல்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று  சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
கன மழை பெய்யும் மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் கூறிய மாவட்டங்கள் பின்வருமாறு: திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி,, பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி
 
Edited by Siva