தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை! ஒரு மூட்டைக்கு ரூ.450 உயர்வா?
தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த சில மாதங்களில் கிடு கிடுவென உயர்ந்து வருவதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாற்பது ரூபாய் என்ற என்று ஒரு கிலோ அரிசி விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அதே அரிசி 60 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அரிசி வேலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும் ஒரு மூட்டைக்கு சராசரியாக ரூ.450 வரை உயர்ந்துள்ளதாகவும் புறப்படுகிறது.
உள்நாட்டில் அரிசி உற்பத்தி குறைவு மற்றும் கையிருப்பு போதிய அளவில் இல்லாததே அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் வெளிநாடுகளிலும் அரிசிக்கு திண்டாட்டம் ஆகி உள்ளது.
இந்த நிலையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Edited by Siva