திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (11:59 IST)

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில்  தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி விளங்குகிறது என்றும், இங்கு படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி வளர்த்தெடுக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மேலும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை என்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 
மேலும் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்,
 
Edited by Mahendran