1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2025 (17:34 IST)

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

Edappadi amitshah
மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருப்பதாகவும், அப்போது அவர் ஈபிஎஸ், மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக சென்னை வர இருக்கிறார். நாளை இரவு 10.30 மணிக்குச் சென்னை வரும் அமித்ஷா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
சட்டமன்றத் தேர்தலை பாஜக கூட்டணி எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட  கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
 
வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva