ஊர் சுற்றியான கள்ளக்காதலி; ஆத்திரத்தில் அரிவாள் வெட்டு: ஓய்வுபெற்ற எஸ்.ஜி கைது!

Sugapriya Prakash| Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:12 IST)
கள்ளக்காதலியின் போக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நெல்லையை சேர்ந்த சுப்புலட்சுமி கடந்த 8 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீஸார் இது குறித்து வழங்க்கு பதிவு செய்து விசாரணை நடத்த துவங்கினர். 
 
விசாரணையின் போது ஓய்வுபெற்ற சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் என்பவர் சுப்புலட்சுமிக்கு பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் நடராஜனை விசாரித்த போது, நானும் சுப்புலட்சுமியும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். நாட்கள் நகர சுப்புலட்சுமி மது பழக்கத்திற்கு ஆளாகி தனியாக வெளியே சுற்றித்திரிந்தால். 
 
நான் கண்டித்தும் கேட்கவில்லை. சம்பவ தினத்தன்று இதனல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுப்புலட்சுமியை தாக்கினேன். இதில் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :