பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு தொடக்கம்


Abimukatheesh| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (11:37 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

 

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 
முன்பதிவு செய்ய தமிழகத்தில் 26 மையங்கள் இயங்க உள்ளன. சென்னையில் மட்டும் 5 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் இணையதளத்திலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது. பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சிரமத்தை குறைக்கவும் 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக 300 கி.மீ.க்கு மேல் தூரம் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :