1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:07 IST)

அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் புகை பிடித்த அதிகாரி சஸ்பெண்ட்!

cigarette
அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் புகை பிடித்ததாக அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை மாவட்டம் திருமங்கலம்  ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக சௌந்தராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அரசு அலுவலகத்தில் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை அடுத்து அவர் மீது புகார்கள் குவிந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் விசாரணையில் பணி நேரத்தில் அவர் புகைப்பிடித்தது உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சௌந்தர்ராஜன் மதுரை மாவட்டத்தை விட்டு அனுமதி இன்றி வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது