1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. facebook live video license suspend

பைக் ஓட்டும்போது லைவ் வீடியோ எடுத்தவரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்!

license
பைக்கில் செல்லும் போது மொபைல் போனின் மூலம் லைவ் வீடியோ எடுத்த நபரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பைக் ஓட்டும்போது பேஸ்புக் லைவ் வீடியோவை ஒளிபரப்பினார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதம் ரத்து செய்து இடுக்கி ஆர்.டி.ஓ உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இதுகுறித்து அந்த நபர் விளக்கமளிக்கையில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லாதது குறித்து புகார் தெரிவிக்க அவ்வாறு லைவி வீடியோ வெளியிட்டதாக விளக்கமளித்தார் 
 
ஆனால் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த இடுக்கி ஆர்.டிஓ அவருடைய லைசென்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்!