புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (20:21 IST)

மூதாட்டி உட்பட மூன்று பேர் குணமடைந்தனர் – கொரொனாவிலிருந்து தப்பியவர்கள்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள சம்பவம் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியிருப்பது பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்த மூதாட்டியோடே அவரது குடும்பத்தை சேர்ந்த 54 வயது பெண்மணி ஒருவரும், 23 வயது இளைஞரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.