செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (13:03 IST)

மின் கட்டண உயர்வின் பின்னணி என்ன??

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 301 - 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்த பரிசலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 601 - 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு பரிசலீக்கப்பட்டுள்ளதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், மின் வாரியத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் எகிறியுள்ள கடன், மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை, மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி மத்திய அரசு தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம் போன்ற காரணங்களால் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.