டிஜிட்டல் கரன்சி: சோதனை முயற்சியில் ரூ.275 கோடிக்கு வர்த்தகம்
டிஜிட்டல் கரன்சி: சோதனை முயற்சியில் ரூ.275 கோடிக்கு வர்த்தகம்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்த நிலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக கரன்சி அறிமுகம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி 275 கோடிக்கு வர்த்தகம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தி ஒன்பது வங்கிகள் நாற்பத்தி எட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சியில் 275 கோடிக்கும் வர்த்தகமாகியுள்ளதை அடுத்து ரிசர்வ் வங்கி இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்து விரைவில் பொதுமக்களுக்கும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
Edited by Mahendran