செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (15:06 IST)

ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 6 மாதமாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்தார். 
 
பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
மேலும், முதல்வர் முக ஸ்டாலின், பரமேஸ்வரி உடல்நிலை குறித்து குடும்பத்தாருடன் கேட்டு அறிந்துக்கொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.