தமிழகத்தில் முதல் முறையாக ரேபிட் சோதனை! எங்கு தெரியுமா?
தமிழகத்தில் சேலத்தில் முதல் முறையாக கொரோனா ரேபிட் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1323 ஆக உள்ளது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து மத்திய அரசு 24,000 கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட்களை அனுப்பியுள்ளது. இந்த கருவிகள் சேலம், சென்னை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு நேற்றிரவே அனுப்பி வைக்கப்பட்டு இன்று காலை அனைத்து மருத்துவமனைகளுக்கும் வந்தடைந்தன.
இந்நிலையில் சேலத்தில் முதல்முதலாக இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு 30 நிமிடத்தில் முடிவு வெளியாகியுள்ளது. 18 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபோலவே சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளிலும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.