சிலைகள் பறிமுதல் - யார் இந்த ரன்வீர் ஷா தெரியுமா?

Last Modified சனி, 29 செப்டம்பர் 2018 (12:15 IST)
பல ஆயிரம் கோடி சிலைகளை தனது விட்டில் பதுக்கு வைத்திருந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா மின்சார கனவு படத்தில் நடைத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 
சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்ற குழு 89 சிலைகளை பறிமுதல் செய்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக்கூறப்படுகிறது.
 
மும்பையில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வரும் ரன்வீர் ஷாவுக்கு சென்னையில் கிண்டியில் ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இருந்துதான் சிலைகள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 
இந்நிலையில், சிலை கடத்தலில் தொடர்புடைய ரன்வீர் ஷா பிரபுதேவா, அரவிந்த சாமி நடித்த மின்சார கனவு படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படத்தின் கதாநாயகி கஜோலை பெண் பார்க்க வரும் நபராக அவர் நடித்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :