1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 1 ஆகஸ்ட் 2018 (19:20 IST)

திமுகவில் இடமில்லை: பிரியாணி சண்டைக்கு ஸ்டாலின் அதிரடி ஆக்‌ஷன்!

கடையை மூடும் வேளையில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த சம்பவம் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜே ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது. 
 
இதனையடுத்து, யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யுவராஜும், அவரின் உடன் வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர்.  
 
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். ஆம், யுவராஜ் மற்றும் அவருடன் இருந்த திமுக பிரமுகர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர் ஸ்டாலின்.