செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (00:17 IST)

'தமிழன்' என்பதைவிட 'தலித்' என்பது பெருமையா? ரஞ்சித்துக்கு எஸ்.வி.சேகர் கேள்வி

சமீபத்தில் இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தபோது அமீர் பேச்சுக்கு ரஞ்சித் மிக ஆக்ரோஷமாக பதிலளித்தார்



 
 
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், '""தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்."" தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்' என்று கூறியுள்ளார்.
 
இதற்கு பதில் கூறிய இயக்குனர் ரஞ்சித், 'தலித் என்பது சாதியல்ல, ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலைக்கருத்தியல்' என்று கூறியுள்ளார். இருவரது கருத்துக்களுக்கும் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருகின்றன.