ராம்குமார் சமையல் அறைக்கு செல்ல முடியவே முடியாது - அடித்துக் கூறும் நடராஜன்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (00:52 IST)
உயர்பாதுகாப்பு கைதியான ராம்குமார் எப்படி சமையல் அறைக்கு செல்ல முடியும்.. முடியவே முடியாது என்று வழக்கறிஞர் கி.நடராஜன் கூறியுள்ளார்.
 
 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் சமையல் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தற்கொலை முயற்சித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
 
ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று முன்வைக்கிறார் வழக்கறிஞர்கள் கி.நடராஜன். கி.நடராஜன் பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களில் கலந்துகொண்டு விசாரணைக் கைதியாக 6 முறை சிறையில் கழித்தவர்.
 
இது குறித்து கருத்து தெரிவித்து கி.நடராஜன், “ஆறு முறைக்கு மேல் விசாரணை கைதியாக சிறைக்குள் இருந்து இருக்கிறேன்.. ஆனால் ஒரு முறை கூட சமையலறை எட்டி பார்க்க முடியவில்லை.
 
விசாரணை கைதிகள் அதுவும் மிகவும் உயர்பாதுகாப்பு கைதியான ராம்குமார் எப்படி சமையல் அறைக்கு செல்ல முடியும்.. முடியவே முடியாது” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :