வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (16:23 IST)

லண்டனில் இருந்து ராமர், சீதையை மீட்டு வந்த மத்திய அமைச்சர்!

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பழம்பெரும் விலைமதிப்பில்லா சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்த கயவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது 
 
இதனை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் இருந்தனர். அவ்வாறு ஆஸ்திரேலியா உள்பட ஒரு சில நாடுகளில் இருந்து சில சிலைகள் மீட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து சமீபத்தில் லண்டன் சென்ற மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் இங்கிலாந்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சிலைகளை தமிழகத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார் 
 
அந்த வகையில் தற்போது அவர் இந்த சிலைகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். லண்டனில் மீட்கப்பட்ட ராமர் சீதை மற்றும் லட்சுமணன் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக மக்கள் மீண்டும் ராமர் சீதை லட்சுமணன் சிலையை மீட்டு எடுத்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்