திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (16:10 IST)

இங்கு யாருக்கும் வெட்கமில்லை; ரஜினியை தொடர்ந்து விமர்சிக்கும் ராமதாஸ்

கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 
கோச்சடையான் படத்திற்காக ஆட் பியூரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கெடு விதித்தும் லதா ரஜினிகாந்த்  கடன் பாக்கியை செலுத்தவில்லை. 
 
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் கடன் பாக்கியை ஏன் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூலை 10ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், கொடுத்தக் கடனை திரும்பக் கேட்பது என்ன கலாச்சாரம். சிஸ்டத்தை மாத்துங்க மைலார்ட்! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேலியாக டுவிட் செய்திருந்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2முறை அவகாசம் கொடுத்தும் கடனை செலுத்தவில்லை. இதுகுறித்த வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்க்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
இதற்கு இன்று மீண்டும் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்றம் கூறியதை தலைப்புடன் பதிவிட்டுள்ளார். அதாவது வெட்கமில்லை.... இங்கு யாருக்கும் வெட்கமில்லை என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
 
ராமதாஸ் தொடர்ந்து கோச்சடையான் கடன் தொடர்பான வழக்கு விவகாரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.