1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:25 IST)

பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன - யாரை சொல்கிறார் ராமதாஸ்?

தலைமை செயலக அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகும் விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் தமிழக முதல்வராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவியிலிருந்து விலகி வருகிறார்கள். தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராகவும், ஜெ.விற்கு நெருக்கமாகவும் திகழ்ந்த ஷீலா பாலாகிருஷ்ணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் இன்று காலை தனது பதவியிலிருந்து வெளியேறினார். சொந்த பிரச்சனை காரணமாக, அந்த பதவியிலிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சசிகலா முதல்வராகும் சூழ்நிலையில், தலைமை செயலக அதிகாரிகள் இப்படி ஒருவர் பின் ஒருவராக வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ பிசாசுகள் குடியேறுவதற்காக பேய்கள் வெளியேறுகின்றன” என கூறியுள்ளார்.