1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (08:29 IST)

பிறை தெரியல..! ரமலான் நோன்பு எப்போது? – தலைமை காஜி அறிவிப்பு!

ramadan
இஸ்லாமிய திருநாளான ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு காலம் எப்போது தொடங்கும் என்பது குறித்து தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் இஸ்லாமிய புனித விழாவான ரம்ஜான் பண்டிக்கை ரம்ஜான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது. ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் போற்றும் பண்டிகையாக இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு காலம் தற்போது தொடங்க உள்ளது.

ரம்ஜான் நோன்பு நேற்றே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறை தோன்றாததால் நோன்பு தொடங்கவில்லை. இந்நிலையில் நோன்பு தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயுப் அறிவித்துள்ளார். அதன்படி “ரமலான் மாதப்பிறை தமிழ்நாட்டில் நேற்று எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (மார்ச் 24) அன்று தொடங்கும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K