வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (12:20 IST)

முதல்வர் வேட்பாளர் இருந்தாதான் சரியா இருக்கும்! – ஆலோசனையில் ரஜினி கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகள் முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிருத்தி தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். ஆனால் கட்சியின் முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொள்வது சரியானதல்ல என ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்களாம். இந்நிலையில் ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினியுடன் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.