திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (12:41 IST)

ட்ரெண்டாகும் #சத்தியமா_விடவே_கூடாது! களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்!

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகிவிட்ட நிலையில் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து காவல்துறையின் அதிகார மீறலை கண்டித்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

நேற்று மாஜிஸ்திரேட் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட்டை விசாரணையின்போது காவலர் ஒருவர் மிரட்டும் தோனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொந்தளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் போலீஸார் மாஜிஸ்திரேட்டை பேசியது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இந்த சம்பவம் குறித்து ரஜினி கருத்து தெரிவித்திருந்தாலும், சாத்தான்குளம் சம்பவத்தில் மிகவும் உறுதியாக ரஜினிகாந்த் தெரிவிக்கும் முதல் கண்டனம் இதுவாகும். இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். அதேசமயம் இத்தனை நாளாய் இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தாமதமாக கண்டனம் பதிவு செய்திருப்பது குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.