வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:42 IST)

கட்சி பெயரை மாற்றாவிட்டால் ரஜினி மீது வழக்கு: சொன்னது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பெயரில்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் தொடங்க உள்ள மக்கள் சேவை கட்சி என்ற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமென அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற இந்த கட்சியின் கூட்டத்தில் இயக்கத்தின் தலைவர் பேசியபோது, ‘நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள மக்கள் சேவையை கட்சி என்ற பெயர் ஏற்கனவே நாங்கள் வைத்துள்ள அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரை ஒட்டி உள்ளது
 
நாங்கள் 25 ஆண்டுகளாக இந்த கட்சியை நடத்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். ரஜினி தனது கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயர் வைத்தால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும். எனவே ரஜினி தனது கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் கட்சி பெயர் குறித்த இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது